எமது கேள்விகளுக்கு பயந்து அமைச்சர்கள் பாராளுமன்றத்தை புறக்கணிக்கின்றனர்

Date:

உள்ளூராட்சி தேர்தல்களுக்கான வேட்பாளர் தேர்வு தொடர்பான வேலைத்திட்டங்கள் இடம்பெறும் இவ் நாட்களில் மட்டக்களப்பு மக்களது பிரச்சனைக்கான தீர்வுகள் தொடர்பில் பாராளுமன்றம் வருகை தந்தால் எமது கேள்விகளுக்கான பொறுப்பான பதிலை வழங்கும் அமைச்சர்கள் பயத்தில் பாராளுமன்றம் வருகை தருவதில்லை.

இதனால் எமக்கு பாரிய நேர விரையம் ஏற்படுகின்றது. மக்களது பிரச்சனையும் ஓர் முடிவில்லாமல் நீண்டுகொண்டு செல்கின்றது. இதனை சபாநாயகர் கருத்தில் கொண்டு இவற்றுக்கான நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தெரிவித்துள்ளார். புதன்கிழமை (12) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் இதனை தெரிவித்துள்ளார்.

இவர் மேலும் தெரிவிக்கையில்: மட்டக்களப்பு மாவட்டத்தில்‌, போரதீவுபற்று பிரதேச செயலாளர்‌ பிரிவுக்கு உரித்தான பளுகாமம்‌ பிரதேசத்தில்‌ அமைந்துள்ள தபால்‌ அலுவலகத்திற்கு நிரந்தரக்‌ கட்டிடமொன்று இல்லையென்பதுடன்‌ மேற்படி தபால்‌ அலுவலகம்‌ தற்காலிக கட்டிடமொன்றில்‌ பேணிவரப்படுகின்றது.

மேற்படி தபால்‌ நிலையத்திற்கு நிரந்தரக்‌ கட்டிடமொன்றை நிர்மாணிக்க நடவடிக்கை மேற் கொள்ளப்படுமா என்பதையும்‌ அக்கட்டிடம்‌ நிர்மாணிக்கப்படும்‌ காலப்பகுதி யாதென்பதையும்‌ இதற்கு பொறுப்பான அமைச்சர் தெரிவிக்க வேண்டுமென அமைச்சர் தெரிவித்துள்ளர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

இலவச விசா வசதிகள் வழங்கப்படும்

எதிர்காலத்தில், மேலும் சில நாடுகளின் வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டிற்குள் நுழைவதற்கு இலவச...

பட்டலந்த அறிக்கை விவாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகும்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் ஏப்ரல் மாதம் 10...

துப்பாக்கிகளுடன் 5 பேர் கைது

அஹுங்கல்ல, பல்லம, மாபலகம, மஹநான்னேரிய மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, நுவரெலியா மற்றும்...