மட்டக்களப்பு மக்களின் பிரதான வாழ்வாதாரம் தொடர்பான கோரிக்கை

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊர்காமம் பிரதேசத்தில் தும்பாலைச்சோலை எனும் பிரதேசத்தில் ஒரு மீனவர் சங்கம் இருக்கின்றது.

ஊர்காமத்தில் குறித்த மீன்பிடி சங்கத்திற்கு ஒரு துறைமுகம் இல்லாத பிரச்சினை பாரிய பிரச்சினையாக உள்ளது. நீண்ட தூரம் அதாவது 2.5 கிலோமீற்றர் தூரம் காட்டுப்பாதை அல்லது யானை தொல்லைக்கு மத்தியில் அந்த பாதை வழியாக நடந்து ஊர்காமத்திற்கு சென்று தான் இந்த மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட வேண்டி உள்ளது.

எனவே ஒரு துறைமுகம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. மட்டக்களப்பில் நெல்சன் நன்னீர் மீன் வளர்ப்பு துறையின் அதிகாரிக்கு தெரியும். எனவே இவ்விடயம் தொடர்பாக உடனடியாக கவனம் செலுத்தி, தீர்மானம் மேற்கொள்ளுமாறு கோருகின்றேன். என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் புதன்கிழமை (05) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் இதனை தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாலையில் மீனவர்களுக்கு தேவைப்படும் ஒரு இடம். அதாவது படகுகள் வந்து நிறுத்தப்படும் இடம்.

பிள்ளையான் உடைய தம்பி அகிலா எனும் நபர் தன்னுடைய ஒரு வேலியை அமைத்து அங்கு படகுகளை நிறுத்துவதற்கு தடை ஏற்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அபிவிருத்தி குழு கூட்டத்தில் கவனத்தில் எடுக்கப்பட்ட போது, அபிவிருத்தி குழு தலைவர் அருண் ஹேமசந்திர அவர்கள் இவற்றை அராஜகமான முறையில் முன்னெடுக்க முடியாது.

சட்டப்படி மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி இன்று நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும் இப்பிரச்சினை இன்றும் இருக்கின்றது. அந்தவகையில் கௌரவ அமைச்சர் அவர்களே, இந்த படகுகளை நிறுத்துவதற்கு மக்களுக்கு இது தொடர்பில் நீதியை பெற்றுத் தருமாறும் வலியுறுத்துகின்றேன்.

மூன்றாவது விடயம். களுவாங்கேணியையும் ஏறாவூரையும் இணைக்கும் முக்கியமான ஒரு பாதை. இந்த பாதையில் ஒரு சிறிய பாலம் அமைத்து பாதையை புனரமைத்து தருமாறு கேட்டுக் கொள்கின்றோம். ஏனென்றால் ஏறாவூரில் புன்னக்குடாவிலேயே கடற்றொழிலில் ஈடுபடுபவர்களுக்கான எரிபொருள்இ ஐஸ் கட்டி தொழிற்சாலை ஆகியன இருக்கின்றன. எனவே களுவாங்கேணிக்கு இவ்விடயம் மிக முக்கியமானதாகும்.

அதேபோன்று தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக இருப்பினும் அதனை மாலை நேரத்தில் பேசுமாறு சபாநாயகரது உரையில் அவர் குறிப்பிட்டிருந்தார். மாலை நேரத்தில் பேசினால் அது தொடர்பில் பதிலளிக்க அமைச்சர்கள் இருக்கமாட்டார்கள். அதனால் தான் இவற்றை காலை நேரத்தில் பேசுகின்றோம். பாராளுமன்ற உறுப்பினர்களை பாதுகாப்பதற்காகவே சாதாரணமாக சபாநாயகர் இருப்பார்.

ஆனால் சபாநாயகரே பிழை செய்தால் எவ்வாறு சிறப்புரிமை பிரச்சினையை எழுப்புவது. அர்ச்சுனாவிற்கும் இராசமாணிக்கத்திற்கும் சபாநாயகரிடமிருந்து கடும் எச்சரிக்கை. இருவரது நடத்தையும் கேவலமானது என பத்திரிகைகளிலும் தொலைக்காட்சி நிகழ்விலும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் சபாநாயகரின் நடத்தையே கேவலமானது. தயவு செய்து எங்களது நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்காதீர்கள். பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவத்தை பாதுகாப்பது இந்த பிரதான ஆசனத்தில் உள்ள சபாநாயகரது பொறுப்பாகும். அவர்தான் இந்த சபையை சரியான முறையில் வழிநடத்த வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும்

புனித தந்த தாது சின்ன வழிபாடு காரணமாக கண்டியிலும் அதைச் சுற்றியுள்ள...

பலத்த மின்னல் ஏற்படும் அபாயம்: எச்சரிக்கை

இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படும் அபாயம் குறித்து வளிமண்டலவியல்...

A/L பெறுபேறுகள் இன்றிரவு வெளியிடப்படும்

2024 ஆம் ஆண்டின் க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்றிரவு வெளியிடப்படுமென...

பெசில் மீண்டும் அரசியலில்…

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச மீண்டும் நேரடி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளார். எதிர்வரும்...