பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா இன்று மாலை (29) யாழ்ப்பாணப் பகுதியில் விசேட பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இவ்வாறு கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர், அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடந்த 20ஆம் திகதி இரவு அனுராதபுரம் தலாவ பகுதியில் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக குற்றச்சாட்டின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, அனுராதபுரம் பொலிஸார் இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை தொடங்கி, அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்துள்ளனர்.