மீடியாகொட , கிரலகஹவெல சந்தியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு வந்ததாகச் சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிளை பத்தேகம பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
பத்தேகம பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, படபொல – பத்தேகம வீதியில் அம்பேகம அம்பலத்திற்கு அருகில் கைவிடப்பட்டிருந்த குறித்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீடியாகொட, அலுத்வல ஊடாக பத்தேகம நோக்கிப் பயணிக்கும்போது மோட்டார் சைக்கிளை வழியில் விட்டுச் சென்றிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள 3 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.



