மின்சாரம் தாக்கியதில் தாயும், மகளும் உயிரிழப்பு

கலகா,நவனெலிய கிரிபோகஹின்ன பகுதியில் இன்று (07) காலை 10.00 மணியளவில் மின்சாரம் தாக்கியதில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

கறிவேப்பிலை பறித்துக்கொண்டிருந்தபோது தரையில் விழுந்து கிடந்த மின்சாரக் கம்பியில் சிக்குண்டதிலேயே மின்சாரம் தாக்கி இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலகா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Similar Posts