மொறவெவ பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

திருகோணமலை மாவட்டம் மொறவெவ பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

மொறவெவ பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP) – 2,663 வாக்குகள் – 9 உறுப்பினர்கள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 1,060 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 847 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) – 427 வாக்குகள் – 1 உறுப்பினர்

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 212 வாக்குகள் – 1 உறுப்பினர்

Similar Posts