பொலிஸ் பரிசோதகருக்கு 7 வருட சிறைத் தண்டனை
ஹம்பேகமுவ பொலிஸ் நிலையத்தில் வைத்து நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாக சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதி 7 வருட சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
தற்போது சியம்பலாண்டுவ பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்டு கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கே இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
குறித்த நபருக்கு 7 வருட சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக 10,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அதனைச் செலுத்தத் தவறினால் 6 மாத கால சாதாரண சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
