தேங்காய் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை – இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி?

Date:

உள்ளூர் சந்தையில் தேவையற்ற தேங்காய் விலை உயர்வை தடுக்கும் வகையில் பல தேங்காய் உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு அங்கீகாரம் வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் இந்த வாரம் சமர்ப்பிக்கப்படும் என தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாந்த ரணதுங்க தெரிவித்தார்.

தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை இலங்கையில் 200 மில்லியன் தேங்காய்கள் பற்றாக்குறையாக இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

மேலும், ரணதுங்க, தற்போதைய தேங்காயின் விலை உயர்வுக்குக் சீசன் காலத்தில் தேங்காய் அறுவடையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாகும் எனத் தெரிவித்தார்.

தேங்காய் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காக பல உள்ளுர் கைத்தொழில்களுக்குத் தேவையான அத்தியாவசிய மூலப்பொருட்களான தேங்காய்ப்பால், தேங்காய் மாவு மற்றும் உறைந்த தேங்காய் துருவல் ஆகியவற்றின் இறக்குமதியை அங்கீகரிப்பதற்காக அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், “இந்த இறக்குமதிகள் மூலம் உள்ளூர் சந்தையில் தேங்காயின் விலை உயர்வை தடுக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தங்கம் விலை மீண்டும் எகிறியது

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள அதேவேளை, அதற்கு இணையாக உள்நாட்டு...

முன்னாள் சபாநாயகர் கைது

சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் முன்னாள் சபாநாயகர் அசோக...

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து கொடுப்பனவு

நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமை மற்றும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தை...

காணாமல் போனோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

அனர்த்த நிலமைகள் தொடர்பான விரிவான அறிக்கையின் சாராம்சத்தை அனர்த்த முகாமைத்துவ நிலையம்...