24ஆவது பிரதமராக மார்க் கார்னி பதவியேற்பு

Date:

கனடாவின் 24ஆவது பிரதமராக மார்க் கார்னி பதவியேற்றுக் கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனடா நாட்டின் லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும், அந்நாட்டின் 24ஆவது பிரதமராகவும் கனடா வங்கியின் முன்னாள் தலைவரான மார்க் கார்னி அண்மையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரியில் தனது பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ இராஜினாமா செய்ததையடுத்து லிபரல் கட்சியின் தலைமை பதவிக்கான போட்டியில் மார்க் கார்னி 1,31,674 வாக்குகளைப் பெற்றார். இது மொத்த வாக்குகளில் சுமார் 85.9 சதவீத வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து கனடா பொருளாதார மற்றும் அரசியல் பதட்டங்களை எதிர்கொண்டு வரும் காலகட்டத்தில் கார்னி பிரதமராக பதவியேற்றுள்ளார்.

மார்க் கார்னி கடந்த 2008 முதல் 2013ஆம் ஆண்டு வரை கனடா வங்கியின் 8ஆவது ஆளுநராக பணியாற்றியுள்ளதுடன் 2011 முதல் 2018ஆம் ஆண்டு வரை நிதி நிலைத்தன்மை வாரிய தலைவராகவும் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும்

புனித தந்த தாது சின்ன வழிபாடு காரணமாக கண்டியிலும் அதைச் சுற்றியுள்ள...

பலத்த மின்னல் ஏற்படும் அபாயம்: எச்சரிக்கை

இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படும் அபாயம் குறித்து வளிமண்டலவியல்...

A/L பெறுபேறுகள் இன்றிரவு வெளியிடப்படும்

2024 ஆம் ஆண்டின் க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்றிரவு வெளியிடப்படுமென...

பெசில் மீண்டும் அரசியலில்…

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச மீண்டும் நேரடி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளார். எதிர்வரும்...