மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக கடந்த ஜனவரி 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் பெப்ரவரி 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், புதன்கிழமை (29) கைது செய்யப்பட்ட மற்றொரு சந்தேகநபரை, விசாரணைக்காக வியாழக்கிழமை (30) வரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்திருக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததுடன், பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் படுகாயமடைந்தனர். இதன் பின்னணியில் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரையின் பேரில் விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் போது, பிரதான சந்தேகநபர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்ட,மூவர் இராணுவத்துடன் தொடர்புடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை (29) மன்னார் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, இந்த 5 பேரையும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.