போதைப்பொருளுடன் இந்தியர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.34.19 மில்லியன் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

35 வயதுடைய இந்தியரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பேங்கொக்கிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL 403 இல் மூலம் இன்று (02) காலை நாட்டுக்கு வந்துள்ளார்.

சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Similar Posts