மரம் மற்றும் பாறை சரிவினால் மலையக ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இங்குருஓயா – கலபொட இடையே ரயில் பாதையில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் சேவை தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஹாலிஎல – பதுளை இடையே பாறை சரிவும் ரயில் போக்குவரத்தை பாதித்துள்ளது.
தெளிவான தகவல்கள் மற்றும் மாற்று ஏற்பாடுகள் குறித்து ரயில்வே திணைக்களம் விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும், பயணிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.