புத்தளம் – மதுரங்குளி பொலிஸ் பிரிவில் உள்ள சின்னப்பாடு பகுதியில் கேரளக் கஞ்சாவுடன் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் சின்னப்பாடு பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வடமேல் கடற்படையின் தம்பபண்ணி கடற்படையினருடன் இணைந்து புத்தளம் பிரதேச குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் இன்று (25) சந்தேகத்திற்கிடமான வீடொன்றை சோதனை செய்தனர்.
சோதனையின் போது, அந்த வீட்டில் சூட்சமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 245 கிராம் கேரளக் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. இதனைக் கைப்பற்றியதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவரையும் கைது செய்தனர்.
கடற்படையினர் தெரிவித்ததாவது, கைப்பற்றப்பட்ட கேரளக் கஞ்சாவின் பெறுமதி ரூ.8 இலட்சம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கேரளக் கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மதுரங்குளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதையும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.