இலங்கை போக்குவரத்து சபையின் தலைவராக இருந்த ரமல் சிறிவர்தன தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்ததை தொடர்ந்து, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் கபில சி. கே. பெரேரா புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசு அமைந்த பின்னர் போக்குவரத்து சபையின் தலைவராக நியமிக்கப்பட்ட ரமல் சிறிவர்தன, தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகியுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. புதிய தலைவர், போக்குவரத்து துறையின் வளர்ச்சி மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்த எதிர்பார்க்கப்படுகிறார்.