யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி நேற்றையதினம் (26) மாலை 4 மணியளவில் பயணித்த கடுகதி ரயில், ஓமந்தை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது.

ரயிலின் ஒரு பெட்டி தடம்புரண்ட நிலையில், ரயில்வே திணைக்கள ஊழியர்கள் அதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
மஹவவிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான ரயில் பாதை புதுப்பிக்கப்பட்ட பின் பதிவான முதல் தடம் புரள்வு சம்பவமாக இதுவே குறிப்பிடப்படுகிறது.





