காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பான செயல்முறையை வலுப்படுத்த தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க செஞ்சிலுவைச் சங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ICRC) தூதுக்குழுவின் புதிய தலைவரான திருமதி செவரின் சப்பாஸ், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவைச் சந்தித்து இந்த உடன்பாட்டை வெளிப்படுத்தியதாக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் புதிய அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு (ICRC) ஆதரவை வழங்குவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களைத் தேடுவதற்காக செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இனம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல், ஒரே இலங்கை நாடாக முன்னோக்கிச் செல்லும் பயணத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக “இலங்கை தினம்” கொண்டாட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.