இந்தோனேசியாவில் கனமழை, வெள்ளம் : 900 பேர் பலி

Date:

இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900 ஆகஅதிகரித்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோரை காணவில்லையென அஞ்சப்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்தோனேசியாவின் மலாக்கா ஜலசந்தியில் கடந்த வாரம் உருவான சூறாவளியால் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன.

கட்டுங்கடங்காத இந்த வௌ்ளத்தின் தாக்கத்தால், தென்கிழக்காசிய நாடுகளின் சில பகுதிகளில் பாரிய மழை மற்றும் மண்சரிவுகளும் ஏற்பட்டிருந்தன.

கடந்த சில தினங்களாக ஆசிய நாடுகளை தாக்கியிருந்த மோசமான காலநிலையின் எதிரொலியே, இந்தோனேசியாவையும் தாக்கியிருந்தது.

இதனால்,இலங்கை, தாய்லாந்து, மலேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளும் கடுமையாக பாதிப்புற்றன.

இந்தோனேசியாவின் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான ஆச்சே தமியாங்கில், வெள்ளத்தால் பல கிராமங்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கி,வாழ்விடங்கள் அடித்துச் செல்லப்பட்டதாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ளமையாலும் தொடர்பாடல் செயலிழந்தமையாலும் மீட்பு பணிகளிலும் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ட்ரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கிரீன்லாந்தில் பேரணி

கிரீன்லாந்தை கையகப்படுத்துவதற்கான ட்ரம்பின் தீவிர முயற்சிக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி...

இ.தொ.கா வின் 20 உறுப்பினர்கள் இந்தியாவுக்கு பயணம்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்சந்தோஷ் ஜாவிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) பொதுச்...

உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல் இலங்கையில் அறிமுகம்

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பெரிய இயற்கை ஊதா நட்சத்திர இரத்தினக்கல் உலகளாவிய அறிவியல்...

எதிர்க்கட்சித் தலைவர் கடத்தல்

உகாண்டாவில் தேர்தல் வன்முறை வெடித்துள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் இராணுவத்தினரால் பலவந்தமாக...