கட்டுநாயக்க விமான நிலையத்தில் 12.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது, குறித்த நபர் தனது உடமைகள் உள்ள பொதிகளில் சாக்லெட் பொதி போல மோசடி செய்து, போதைப்பொருளை மறைத்து நாட்டிற்குள் கடத்த முயன்றமை கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர் சென்னையைச் சேர்ந்த 45 வயதான வியாபாரி என தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
