இலங்கை கடற்படையினால் கடந்த சில நாட்களில் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கு இடையூறான நிலைமையை கருத்தில் கொண்டு, இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ்கனி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கே. நவாஸ்கனி எழுதிய கடிதத்தில், “தமிழக மீனவர்களுக்கு எதிராக இப்படி தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படுவது, அவர்களின் படகுகள் கைப்பற்றப்படுவது, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவத்தில், 2025 ஜனவரி 25ஆம் திகதி இராமேஸ்வரத்தை சேர்ந்த 33 மீனவர்கள் மற்றும் 3 மீன்பிடி படகுகள், 2025 ஜனவரி 12ஆம் திகதி 8 மீனவர்கள் மற்றும் 2 மீன்பிடி படகுகள் ஆகியவை இலங்கை கடற்படையினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன் தொடர்பாக, “கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து கைது செய்யப்படுகின்ற தமிழ்நாடு மீனவர்கள் தொடர்பான நிலைமையில் நிரந்தர தீர்வு காண எமக்கு உதவ வேண்டும்” என கே. நவாஸ்கனி தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண, இரு நாட்டின் மீனவர்களின் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.