ICC ஆடவர் ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
7வது இடத்திலிருந்த தீக்ஷன 4 இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்தை பெற்றுள்ள நிலையில், 663 மதிப்பீட்டு புள்ளிகளுடன், ICC தரவரிசையில் முன்னேறியுள்ளார்.

தரவரிசையில் முதலிடத்தில் ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான், இரண்டாவது இடத்தில் இந்தியாவின் குல்தீப் யாதவ் இடம்பிடித்துள்ளனர்.
இதற்கமைய, நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இறுதி இரண்டு போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், தரவரிசை முன்னேற்றம் கண்டுள்ளது.