பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் வெளியாகியுள்ள ஆணைக்குழு அறிக்கை மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களைப் பெற்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குச் சமர்ப்பிக்க மனித உரிமைகள் அமைப்புகள் நடவடிக்கை எடுத்துவருவதாக அறியமுடிகின்றது.
ஏற்கனவே இந்த அறிக்கை வெளிவந்திருந்தாலும் இலங்கை பாராளுமன்றத்தில் அது சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க இலங்கையை வலியுறுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை செயற்படவேண்டுமென மேற்படிமனித உரிமை ஆர்வலர்கள் கோரவுள்ளதாக மேலும் தெரியவந்ததது.
இந்த அறிக்கையில் சாடப்பட்டுள்ள நபர்கள் மற்றும் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்படாத பல விடயங்களை ஆதாரத்துடன் ஐ.நாவிடம் முன்வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.