நாட்டில் நாளை (09) முதல் 12ஆம் திகதி வரையில் மழை தீவிரமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை மாவட்டங்களிலும் 75 மில்லமீற்றர் தொடக்கம் 100 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், சபரகமவ, மத்திய மாகாணங்கள் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



