வடமத்திய மாகாணத்தில் 11ஆம் தர தவணை பரீட்சைகள் இன்று (03) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக மாகாண கல்விச் செயலாளர் சமன் குமார ஜயலத் தெரிவித்துள்ளார்.
வினாத்தாள் கசிவு காரணமாக இந்த பரீட்சைகள் முன்பு இரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், அரசாங்கப் பொதுத் தரப் பரீட்சைகள் நடத்தப்படும் பொது, செமஸ்டர் பரீட்சைகளை பொலிஸ் பாதுகாப்பின் கீழ் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என அவர் கூறினார்.