பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புகள் இன்று (14) நடைபெறாது எனப் பரவும் உண்மைக்கு புறம்பான செய்தி தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் வௌியிட்டதாக கூறப்படும், போலி கையொப்பத்துடன், போலியான கல்வி அமைச்சின் கடிதத் தலைப்பின் கீழ் தயாரிக்கப்பட்ட ஒரு கடிதம் சமூக ஊடகங்களில் பரவி வருவதாகவும், நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் கல்வி வகுப்புகளும் இன்று (14) நடைபெறாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கடிதம் போலியானது என அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.