நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு

Date:

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்றைய தினம் (12) நாடளாவிய ரீதியில் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.

அதன்படி, இன்று காலை 8 மணி முதல் 24 மணித்தியால அடையாள பணிபகிஷ்கரிப்பினை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை (11) பிற்பகல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாகக் குழு நடத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை (10) அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பதிவாகியிருந்தது.

இதற்கு நீதி கோரி, வைத்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியும், இச்சம்பவத்திற்கு எதிரான கண்டனமாகவும் GMOA இந்த பணிப்பகிஷ்கரிப்பை அறிவித்துள்ளது.

மேலும்இ இது போன்ற சம்பவங்கள் வைத்தியர்களுக்குஇ குறிப்பாக பெண் வைத்தியர்களுக்கு பணியிடத்தில் உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களை வெளிப்படுத்துவதாகவும்இ அரசாங்கம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புஆழுயு வலியுறுத்தியுள்ளது.

இதனால், GMOA உறுப்பினர்கள் தனியார் பயிற்சி மற்றும் மாற்று பணிகளைத் தவிர்த்து, ஒருமைப்பாட்டுடன் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் பங்கேற்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல்

இன்று (19) காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த பொலிஸ் மா...

புதிதாக சிந்திப்போம், புதுமை காண்போம் வழிகாட்டல் தொகுப்பு பிரதமரிடம் கையளிப்பு

புதிதாகச் சிந்திப்போம், புதுமை காண்போம்' என்ற கருப்பொருளின் கீழ் ருஹூணு பல்கலைக்கழகத்தின்...

மஹிந்தவின் மனு தள்ளுபடி

முறையான மதிப்பீடின்றி தமக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை 60 ஆக...

கட்டுப்பணம் செலுத்திய ஜேர்மனி பெண்

மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜேர்மனி நாட்டவர் ஒருவர் வைப்புத்தொகை...