GGGI பிரதிப் பணிப்பாளர் நாயகம் இலங்கைப் பிரதமருடன் சந்திப்பு

Date:

உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் (GGGI) பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹெலினா மெக்லியோட், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை வியாழக்கிழமை 20 திகதி பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்.

குறிப்பாக இலங்கையின் பசுமைப் பொருளாதார அபிவிருத்தி மற்றும் பேண்தகு முன்முயற்சிகளை முன்கொண்டுசெல்வதில் இரு தரப்பினருக்கும் இடையிலான ஒத்துழைப்பிற்கான முக்கிய துறைகள் குறித்த பயனுள்ள கலந்துரையாடலொன்று இதன்போது இடம்பெற்றது.

திருமதி ஹெலினா மெக்லியோட் மற்றும் அவரது தூதுக்குழுவை வரவேற்ற பிரதமர், நாட்டில் பேண்தகு அபிவிருத்தியை மேம்படுத்துவதில் GGGI இன் தொடர்ச்சியான ஆதரவைப் பாராட்டினார். பெரிய அளவிலான விவசாயத் திட்டங்ளுக்கு வசதிகளை அளிப்பதில் பேண்தகு நிதியளிப்பு பொறிமுறைகளின் பங்கு உட்பட பல முக்கியமான விடயங்கள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

சூழல் பாதுகாப்பு மற்றும் கழிவு முகாமைத்துவம் குறித்து கவனம் செலுத்தும் ” Clean Sri Lanka ” திட்டத்தின் முன்னேற்றத்துடன், சூழல் பாதிப்புகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட பேண்தகு போக்குவரத்து தீர்வுகளுக்கான அரசாங்கத்தின் திட்டங்கள் பற்றி பிரதமர் இதன்போது விளக்கினார்.

இந்த சந்திப்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, சுற்றாடல் அமைச்சின் சர்வதேச உறவுகள் பணிப்பாளர் குலானி கருணாரத்ன, அமைச்சின் சமுத்திர வளங்கள், சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் துலஞ்சி ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

போராட்டம் நடத்த தடை

வெலிக்கடை பொல்துவ சந்தியில் இன்று முதல் மார்ச் 21 ஆம் திகதி...

தவறான வதந்திகளை நம்ப வேண்டாம்: இ.தொ.கா

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இ.தொ.கா உயர்மட்ட குழுவினரால்...

காட்டுக்கு சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

மாத்தளை, யடவத்த, ஹுலங்கல பிசோஎல்ல அருகே உள்ள காட்டுப்பகுதியில் சுமார் 400...

திட்டமிட்டபடி நாளை பணிப்புறக்கணிப்பு தொடரும்

ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை (18) காலை 7 மணி முதல் 24...