இலங்கை அணியின் தலைவர் சரித் அசலங்க, பதும் நிசங்க, குசல் மெண்டிஸ், மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர், ஐ.சி.சி. அணியில் இடம் பிடித்துள்ள இலங்கை வீரர்களாகும்.
பதும் நிசங்க
கடந்த ஆண்டு 12 போட்டிகளில் பங்கேற்று, 694 ஓட்டங்களை பெற்றார். அதில் 3 சதங்கள் மற்றும் 2 அரை சதங்கள் அடங்கியிருந்தன.
குசல் மெண்டிஸ்
17 போட்டிகளில் பங்கேற்று, 742 ஓட்டங்களை பெற்றார். அதில் 1 சதம் மற்றும் 6 அரை சதங்கள் அடங்கியிருந்தன.
சரித் அசலங்க
16 போட்டிகளில் பங்கேற்று, 605 ஓட்டங்களை பெற்றார். அதில் 1 சதம் மற்றும் 4 அரை சதங்கள் அடங்கியிருந்தன.
வனிந்து ஹசரங்க
10 போட்டிகளில் பங்கேற்று, 26 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 19 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகள் என்ற சிறந்த பந்துவீச்சு சாதனையை இவர் பெற்றார்