முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ இன்று (25) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார்.
ரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் உள்ள 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கிய விவகாரம் தொடர்பாக அவரை சந்தேகநபராக பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபர் கடந்த ஜனவரி 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து இந்தக் கைது நடந்துள்ளது.
இந்த வழக்கில் பிரதான சந்தேகநபராக யோஷித ராஜபக்ஷவின் பாட்டி டெய்சி ஃபோரஸ்ட் பெயரிடப்பட்டுள்ளார்.
பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.