முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசிக்கும் கொழும்பு 07, விஜேராமவில் உள்ள வீட்டின் பெறுமதி 3357 மில்லியன் ரூபா என தேசிய மக்கள் சக்தி (NPP) பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன தெரிவித்தார்.
அந்த காணி ஒரு ஏக்கர் மற்றும் 13.7 பேர்ச்சஸ் பரப்பளவைக் கொண்டதாகவும், அதன் தற்போதைய நிலம் மதிப்பீடு 3128 மில்லியன் ரூபா எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், காணியில் கட்டப்பட்ட மாளிகை 30354 சதுர அடியைக் கொண்டுள்ளதாகவும், அதன் தற்போதைய பெறுமதி 229 மில்லியன் ரூபா எனவும் அவர் வெளிப்படுத்தினார்.
முன்னாள் ஜனாதிபதியும் அவரது மனைவியும் வசிக்கும் வீடு கால்பந்தாட்ட மைதானத்தைப் போன்ற பரப்பளவைக் கொண்டதாகும். ஆனால், வீடமைப்பு அதிகார சபையினால் குறைந்த வருமானம் பெறுவோருக்காக வழங்கப்படும் வீடுகள் சுமார் 450 சதுர அடியாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.