மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட கைது உத்தரவை இரத்து செய்யக் கோரி, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் சட்டத்தரணிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை இன்று (10) தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு மீதான விசாரணை மார்ச் 12 ஆம் திகதி புதன்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடம்பெறும்.