ஒரு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல்

Date:

நுகேகொடை தெல்கட பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து சுமார் ஒரு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பிரபல தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான வாகன உதிரி பாகங்களை இறக்குமதி செய்யும் நிறுவனத்தில் நடத்திய சோதனையின் போது, ​​இந்த வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் உள்ள தரைதளத்தில் வாகன உதிரி பாகங்களுக்கு இடையில் மதுபான போத்தல்கள் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மஹரகமவைச் சேர்ந்த 59 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்டவர் குறித்த நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றியவர் என்பது தெரியவந்துள்ளது.

இந்த வெளிநாட்டு மதுபானம் கொள்ளுப்பிட்டி மற்றும் கொட்டாவ பகுதிகளில் உள்ள இரவு விடுதிகளுக்கு கொண்டு செல்ல தயாராக இருந்ததாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அஞ்சல் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம்

அஞ்சல் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 7 பிரச்சினைகளை அடிப்படையாகக்...

பாலியல் தொல்லை கொடுத்த பயணி கைது

சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் இரண்டு விமான பணிப்பெண்களுக்கு...

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ரணில் விசேட உரை

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று...

இலவச விசா வசதிகள் வழங்கப்படும்

எதிர்காலத்தில், மேலும் சில நாடுகளின் வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டிற்குள் நுழைவதற்கு இலவச...