கொழும்பு – இரத்தினபுரி வீதி, தானாயம சந்திக்கு அருகில் திங்கட்கிழமை (17) அதிகாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், யட்டியந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பயணிகளை ஏற்றுவதற்காக பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்ட தனியார் பஸ் மீண்டும் கொழும்பு நோக்கி பயணம் தொடங்கும் போதே, பஸ்ஸின் மிதிபலகையில் நின்றுகொண்டிருந்த குறித்த நபர் திடீரென கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த நபர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் அவிசாவளை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.