தேங்காய் நெருக்கடியை தவிர்க்க அவசரதிட்டம்

Date:

எதிர்வரும் மாதங்களில் பாரிய தேங்காய் நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் கே.வி. சமந்த வித்யாரத்ன ஆகியோர் தேங்காய் தொடர்பான பொருட்களை அவசரமாக இறக்குமதி செய்வதற்கான கூட்டு அமைச்சரவை பத்திரத்தை அடுத்த வாரம் சமர்ப்பிக்கவுள்ளனர்.

தற்போது கடும் தட்டுப்பாடு நிலவும் தேங்காய்களுக்கு மாற்றாக, தேங்காய் இறக்குமதிக்கு பொருந்தக்கூடிய நிபந்தனைகள் குறித்து உரிய அதிகாரிகள் விரிவாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மேலும், தற்போதைய நெருக்கடிக்கு உதவுவதற்காக ரஷ்யாவிடமிருந்து 55,000 டொன் உரங்கள் நன்கொடையாக பெறப்பட்டுள்ளதாகவும், அதில் பாதி தேயிலை உற்பத்திக்கும் மற்றொரு பாதி தேங்காய் உற்பத்திக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பாராளுமன்ற ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கு இரு நாள் வதிவிட செயலமர்வு

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கு இரண்டு நாள் வதிவிட...

வானிலை முன்னறிவிப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களிலும்...

பாராளுமன்றில் ஜீவன் சீற்றம்

சௌமிய மூர்த்தி தொண்டமானின் பெயரில் ஞாபகார்த்த மண்டபம் உருவாக்கியது சாபக்கேடு ஆளும்...

அமெரிக்காவில் பனிப்புயல் : 100 மில்லியன் மக்கள் பாதிப்பு

அமெரிக்கா முழுவதும் 100 மில்லியன் மக்கள் பேரழிவு தரும் குளிர்கால வானிலையை...