மிகவும் பிரபலமான பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ள கண்டிக்கும் பதுளைக்கும் இடைப்பட்ட பகுதியின் இயற்கை அழகை பார்வையிட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக ரயிவே திணைக்களம் இந்த ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, கண்டியில் இருந்து காலை 9.45 மணிக்கு பயணித்த இந்த ரயில், பிற்பகல் 5.25க்கு தெமோதர நிலையத்தை சென்றடையும்.
இந்த ரயில் மீண்டும் தெமோதர ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6.00 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.00 மணிக்கு கண்டி ரயில் நிலையத்தை சென்றடையும்.
இந்த ரயில் ஒவ்வொரு வார இறுதியிலும் மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ரயிலில் 176, முதல் வகுப்பு முன்பதிவு இருக்கைகளும், 176 இரண்டாம் வகுப்பு முன்பதிவு இருக்கைகளும், 44 மூன்றாம் வகுப்பு இருக்கைகளும் உள்ளன.
இந்த ரயில் பேராதனை, நாவலப்பிட்டி, ஹட்டன், கிரேட் வெஸ்டன், நானுஓயா, பட்டிப்பொல, ஒஹிய, இதல்கசின்ன, ஹப்புத்தளை, பண்டாரவளை மற்றும் எல்ல ஆகிய நிலையங்களில் மாத்திரம் நிறுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் 10 நிமிடங்களுக்கு பாலத்தின் அருகே வளைவில் நிறுத்தப்படும்.
இதேவேளை, புதிய எல்ல ஒடிசி – நானுஓயா ரயிலை எதிர்வரும் 10ஆம் திகதி முதல் இயக்குவதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
காலை 8.10 மணிக்கு நானுஓயா நிலையத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பிக்கும் இந்த ரயில் இரவு 11.35 மணிக்கு பதுளை நிலையத்தை சென்றடையும்.
இந்த ரயில் மீண்டும் பதுளையில் இருந்து பிற்பகல் 1.00 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு நானுஓயா நிலையத்தை சென்றடையும்.
புதன், வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ரயில்களை இயக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை, எல்ல ஒடிசி கொழும்பு கோட்டை ரயிலை
வார நாட்களில் பதுளை நிலையத்திற்கு இயக்குவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.