இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இன்று (05) சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7.00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், மொத்தம் 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்காக தேர்தல் நடைபெறுகிறது.
1.56 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் 83.76 லட்சம் ஆண்கள், 72.36 லட்சம் பெண்கள், மற்றும் 1,267 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குகின்றனர். வாக்களிப்பை எளிதாக செய்ய முழு நகரம் முழுவதும் 13,766 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
டெல்லி சட்டப்பேரவையின் தற்போதைய பதவிக்காலம் பிப்ரவரி 23 ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளதால், புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான இந்த தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தேர்தலை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்த, 220 துணை இராணுவக் கம்பெனிகள், 19,000 ஊர்காவல் படையினர், மற்றும் 35,626 டெல்லி பொலலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.