ஜப்பானின் பழம்பெருமை வாய்ந்த பியர் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான ‘ஆசஹி’ மீது இணையவழி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதால் அந்நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் (3) முடங்கியுள்ளன.
இதனால், ஜப்பானில் ஆசாஹி நிறுவன பொருட்களுக்கு கடைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஜப்பானில் கடந்த 1949-இல் நிறுவப்பட்ட ஆசஹி குழுமம், பியர் தயாரிப்பில் உலகப் புகழ் பெற்று விளங்குகிறது.
அந்நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளான சூப்பர் ட்ரை பியர், புட்டிகளில் அடைத்து விற்கப்படும் தேநீர், மட்டுமில்லாது பிற தயாரிப்புகளான குழந்தைகளுக்கான உணவுகள், மிட்டாய்கள் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களுக்கு ஜப்பானிய அங்காடிகளில் பாரிய கேள்வியுண்டு.
இந்தநிலையில், அந்நிறுவனத்தின் மென்பொருள் தொழில்நுட்பத்தில் கடந்த திங்கள்கிழமை (29) இடம்பெற்ற இணையவழி தாக்குதலால் பொருட்களை தயாரித்தல் , பதப்படுத்துதல், ஏற்றுமதி உட்பட அனைத்துவித செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.