சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட , சிகரெட்டுகள் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது
12 கோடி ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள இந்த சிகரெட் தொகுதி கொழும்பு துறைமுக வளாகத்தில் உள்ள ஒரு கிடங்கில் இருந்து சுங்க வருமான பணிக்குழு அதிகாரிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, சுமார் 713,000 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சிகரெட்டுகள் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து பாதுக்க பிரதேசத்தில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் பெட்டிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.