கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று (10) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜராகச் செய்யும் உத்தரவான பிடியாணையை மீளப்பெறுமாறு உத்தரவிட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு, வீதி நாடகம் நடத்தியதாகவும், பொது மக்கள் கஷ்டப்படுத்தப்பட்டதாகவும், பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகவும் கறுவாத்தோட்ட பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ஹிருணிகா பிரேமச்சந்திரா விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பதால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சில நிமிடங்களில், சந்தேகநபர் தனது சட்டத்தரணி மூலமாக நீதிமன்றத்தில் ஆஜராகியதை தொடர்ந்து, நீதவான் பிடியாணைகளை மீளப்பெறுமாறு உத்தரவிட்டுள்ளார்.