கெஹெலிய வழக்கு : விசாரணை திகதி அறிவிப்பு
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான இலஞ்ச ஊழல் வழக்கின் விசாரணையை எதிர்வரும் ஏப்ரல் 27ஆம் திகதி எடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது.
அன்றைய தினத்தில் சாட்சியாளர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்து அவர்களுக்கு அழைப்பாணை விடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முறையற்ற வகையில் சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டு தொடர்பிலேயே இவ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.