காலி சிறைச்சாலையில் இன்று (26) இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இரண்டு கைதிகள் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
காயமடைந்த கைதிகள் இருவரும் சிகிச்சைக்காக காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மோதலின் காரணம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.