கனடாவின் விவசாய உற்பத்தி மற்றும் உணவுப் பொருட்கள் இறக்குமதிகளுக்கு சீனாஅதிக வரி விதித்துள்ளது.
கடந்த ஒக்டோபரில், சீனாவில் தயாரிக்கப்பட்ட அனைத்து மின்சார வாகனங்களுக்கும் 100 சதவீத கூடுதல் வரியையும், அலுமினிய இறக்குமதிகளுக்கு 25 சதவீத கூடுதல் வரியையும் கனடா விதித்தது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இதே போன்ற வரியை விதித்ததைத் தொடர்ந்து கனடாவும் இந்த கூடுதல் வரியை விதித்தது.
தற்போது இதற்குப் பதிலாக கனடாவின் டர்னிப் தாவர எண்ணெய், கேக், பட்டாணிக்கு 100% கூடுதல் வரியையும், பன்றி இறைச்சி மற்றும் கடல்வாழ் உணவு பொருட்களுக்கு 25% கூடுதல் வரியையும் சீனா விதித்துள்ளது.
சீன தயாரிப்புகளுக்கு எதிரான பாகுபாடுகளுக்கு பதிலாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சீன சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.