9ஆவது சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் ஆரம்ப விழா இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் டுபாயில் நடைபெற உள்ள இத்தொடரில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டு, இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.
முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான ஆரம்ப விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகியிருந்தது. மேலும், போட்டிகளுக்கு முன்பாக 8 அணிகளின் தலைவர்களை ஒன்றிணைத்து புகைப்படம் எடுக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், சம்பியன்ஸ் கிண்ணம் தொடர்களுக்கு ஆரம்ப விழா ஏற்பாடு செய்யப்படமாட்டாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.