
மத்திய வங்கி சிறிய முதலீடுகளுக்கு குறிப்பிடத்தக்களவு நிதி வசதிகளை பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்து போலி தகவல்கள் குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் விளம்பரங்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் இந்த போலி விளம்பரங்கள், பொதுமக்களைத் தவறாக வழிநடத்த மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவின் படத்தை பயன்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே இதுபோன்ற போலி தகவலகள் குறித்து அவதானமாக செயற்பட வேண்டுமென பொதுமக்களிடம் மத்திய வங்கி கோரியுள்ளது.