மின் கட்டண அதிகரிப்பைக் கோரும் மின்சார சபை
2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத்தை 13.56 சதவீதத்தால் அதிகரிக்க இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளது.
அதன்படி, ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்காக இந்த மின்சாரக் கட்டணத் திருத்தக் கோரிக்கையை இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ளது.