ஓய்வூதியச் சட்டத்தை நீக்க அமைச்சரவை ஒப்புதல்

Date:

பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை (நீக்குதல்) நீக்குவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியள்ளது.

தேசிய அரச சபையின் 1971 ஆம் ஆண்டின் இலக்கம் 1 கொண்ட பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை நீக்குவதற்கு, 2025-06-16 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவளித்த அனைத்து இலங்கையர்களுக்கும் அரசாங்கம் அளித்த வாக்குறுதியின்படி, பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய உரிமையை ரத்துச் செய்வதை நோக்கமாகக் கொண்டு சட்ட வரைஞரால் இந்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டதன் பின்னர் சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது.

இதன்படி, குறித்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வௌியிடுவதற்கும், அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தங்கம் விலை மீண்டும் எகிறியது

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள அதேவேளை, அதற்கு இணையாக உள்நாட்டு...

முன்னாள் சபாநாயகர் கைது

சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் முன்னாள் சபாநாயகர் அசோக...

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து கொடுப்பனவு

நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமை மற்றும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தை...

காணாமல் போனோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

அனர்த்த நிலமைகள் தொடர்பான விரிவான அறிக்கையின் சாராம்சத்தை அனர்த்த முகாமைத்துவ நிலையம்...