பல்கலைக்கழக சட்டத் திருத்தம்

Date:

பல்வித போக்குவரத்து மத்திய நிலையத்தை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையில் பொதுப் போக்குவரத்தை வினைத்திறனாகவும் முறைசார்ந்த வகையிலும் மேற்கொள்வது பற்றிய சமகால அரசின் கொள்கைக்கமைய, போக்குவரத்து மூலங்களுக்கு இடையிலான இடைத்தொடர்பு மூலம் Transit Cities மற்றும் குறித்த Transit Cities லிருந்து பிரதான நகரத்திற்கு வினைத்திறனான பொதுப் போக்குவரத்து சேவைகளை ஆரம்பிப்பதற்கு இயலுமாகும் வகையில் தேவையான வசதிகளுடன் கூடிய பல்வித போக்குவரத்து மத்திய நிலையத்தை அமைக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, பேருந்து சேவை, ரயில் சேவை, வாடகை வாகன சேவை போன்ற போக்குவரத்து மூலங்களுக்கு இடையிலான இடைத்தொடர்பை மேம்படுத்தும் நோக்கில் நாட்டில் அதிகளவில் பயணிகள் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ள பேருந்துத் தரிப்பிடங்கள் மற்றும் ரயில் நிலையங்களை இணைப்புச் செய்து முறைசார்ந்த சாத்தியவள ஆய்வை மேற்கொண்டு, முன்னுரிமை அடிப்படையில் கீழ்க்காணும் பல்வித போக்குவரத்து மத்திய நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி பதில் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை கொள்கை ரீதியாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  • கண்டி பல்வித போக்குவரத்து மத்திய நிலையம் (உலக வங்கியின் நிதியிடலின் கீழ் தற்போது நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.)
  • அநுராதபுரம் (தெற்கு) பல்வித போக்குவரத்து மத்திய நிலையம் (அநுராதபுரம் ஒருங்கிணைந்த நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் பூர்த்தியடைந்து வருகின்றது.)
  • அநுராதபுரம் (வடக்கு) பல்வித போக்குவரத்து மத்திய நிலையம் (சாத்தியவளக் கற்கையை மேற்கொள்வதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளது.)
  • கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை மையமாகக் கொண்டு பல்வித போக்குவரத்து மத்திய நிலையம் (கொழும்பு மற்றும் அண்டிய நகரங்களுக்கான நகரப் போக்குவரத்துத் தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள ComTrans Master Plan மூலம் முன்மொழியப்பட்டுள்ளது.)
  • மொரட்டுவ பல்வித போக்குவரத்து மத்திய நிலையம் (ComTrans Master Plan மூலம் முன்மொழியப்பட்டுள்ளது.)
  • றாகம பல்வித போக்குவரத்து மத்திய நிலையம் (ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள கற்கையின் மூலம் அடையாளங் காணப்பட்டுள்ளது.)
  • அவிசாவளை, காலி, கட்டுநாயக்க, குருநாகல் பல்வித போக்குவரத்து மத்திய நிலையம் (நகர அபிவிருத்தி அதிகாரசபையின் நகரத் திட்டத்திற்கமைய அடையாளங் காணப்பட்டுள்ளது.)
  • கம்பஹா பல்வித போக்குவரத்து மத்திய நிலையம் (நகர அபிவிருத்தி அதிகாரசபையின் நகரத் திட்டத்திற்கமைய, மற்றும் கொழும்பை அண்டிய பிரதேசங்களில் ரயில் கருத்திட்டத்தின் ரயில் மீள்கட்டமைப்பின் மூலம் அடையாளங் காணப்பட்டுள்ளது.)
  • கட்டுநாயக்க பல்வித போக்குவரத்து மத்திய நிலையம் (விமான நிலைய அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் அடையாளங் காணப்பட்டுள்ளது.)
  • களுத்துறை பல்வித போக்குவரத்து மத்திய நிலையம் (மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்மொழிவில் அடையாளங் காணப்பட்டுள்ளது.)
  • காங்கேசன்துறை பல்வித போக்குவரத்து மத்திய நிலையம் (நகர அபிவிருத்தி அதிகாரசபையின் நகரத் திட்டத்தின் கீழ் அடையாளங் காணப்பட்டுள்ளது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ட்ரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கிரீன்லாந்தில் பேரணி

கிரீன்லாந்தை கையகப்படுத்துவதற்கான ட்ரம்பின் தீவிர முயற்சிக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி...

இ.தொ.கா வின் 20 உறுப்பினர்கள் இந்தியாவுக்கு பயணம்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்சந்தோஷ் ஜாவிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) பொதுச்...

உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல் இலங்கையில் அறிமுகம்

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பெரிய இயற்கை ஊதா நட்சத்திர இரத்தினக்கல் உலகளாவிய அறிவியல்...

எதிர்க்கட்சித் தலைவர் கடத்தல்

உகாண்டாவில் தேர்தல் வன்முறை வெடித்துள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் இராணுவத்தினரால் பலவந்தமாக...