மொராக்கோவின் இரண்டாவது பெரிய நகரமான ஃபெஸ் நகரில் இரு நான்கு தள கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 22 போ் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை இடிபாடுகளில் 16 போ் காயமடைந்து அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்றுவருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதேவேளை விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை. இடிபாடுகளில் எத்தனை போ் சிக்கியிருக்கலாம் என்பது குறித்தும் தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.



