பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவிலுள்ள மசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 5 பேர் பலியாகியுள்ளதோடு 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தோர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரமழான் நோன்பு தொடங்கவிருக்கும் நேரத்தில் மசூதியில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரையில் எந்த அமைப்பினரும் பொறுப்பு கூறவில்லை என்று பொலிஸார் கூறியுள்ளனர்.