ரூ.40 இலட்சம் அபராதம் – செலுத்தத் தவறினால் கூடுதல் 3 மாத சிறை

Date:

நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த 8 ஆம் திகதி படகுடன் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள்10 பேரினது வழக்கு இன்று (03) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நீதவான் நளினி சுபாஸ்கரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த மாதம் 23 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இன்றையதினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், இன்றையதினம் (03)சிறைச்சாலை அதிகாரிகளால் 10 மீனவர்களும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.

வழக்கினை ஆராய்ந்த நீதவான் 10 பேரில் இருவர் சிறுவர்கள் என்பதால் அவர்களை வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

அத்துடன் ஏனைய 8 பேருக்கும் ஆறு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறை தண்டனை வழங்கி நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்த எட்டு பேரில் ஒருவர் படகோட்டி என்பதால் அவருக்கு ஆறுமாத கடூழிய சிறைத்தண்டனை வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. அத்துடன் படகோட்டிக்கு 4 மில்லியன் ரூபா அபராத தொகையும் விதிக்கப்பட்டது. இதனை செலுத்த தவறின் மேலும் 3 மாத சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதவான் நளினி சுவாஸ்கரன் உத்தரவிட்டிருந்தார்.

கடந்த மாதம் பத்தாம் திகதி நெடுந்தீவு கடலில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளை ஒரு படவுடன் கடற் படையினர் இவர்களை கைது செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜகத் விதானகேயின் மகனுக்கு விளக்கமறியல்

சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள்...

பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை

பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது.  மேல், சப்ரகமுவ,...

சட்டமா அதிபர் திணைக்களத்தில் புதிய நியமனம்

சட்டமா அதிபர் திணைக்களத்தின் குற்றவியல் பிரிவின் தலைவராக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ்...

வத்தளையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் பலி

வத்தளை, ஹெகித்த, அல்விஸ்வத்த பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். குறித்த...