வெளிநாட்டில் உள்ள சாணக்கியகியனுக்கு தடையுத்தரவு

Date:

துருக்கியில் AI செயற்கை நுண்ணறிவு சம்பந்தமான செயலமர்வில் கலந்து கொள்ள வந்திருக்கும் இரா. சாணக்கியகியனுக்கு இலங்கை குற்றவியல் நடபடிமுறைக் கோவைச் சட்டத்தின் பிரிவு 106(1)(2)(3) ன் கீழான தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

இவ் தடை உத்தரவானது மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற த்தினால் வழங்கப்பட்டுள்ளது. மேற்படி விடயம் சம்பந்தமாக மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் மன்றுக்கு தாக்கல் செய்துள்ள அறிக்கையை ஆராய்ந்த மன்று பின்வருமாறு தடையுத்தரவொன்றினை பிறப்பிப்பதற்கு உத்தரவிட்டுள்ளது.

இலங்கை குடியரசின் தேசிய தினமான 2025.02.04ம் திகதி கொண்டாடப்படவேண்டியது என இலங்கை ஜனனாயக குடியரசின் அரசியலமைப்பின் 08வது சரத்தில் கூறப்பட்டுள்ளதோடு 2025.02.04ம் திகதி மட்டக்களப்பு காந்தி பூங்கா பிரதேசத்தில் நடைபெற இருக்கும் சுதந்திரதின நிகழ்வுகளை பாதிக்கும் வகையிலான எந்தவொரு ஆர்பாட்டத்தையோ சட்டவிரோத செயற்பாடுகளையோ மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட எந்தவொரு பகுதியிலும் மேற்கொள்ளக்கூடாதென தடையுத்தரவு எனக்கும் இன்னும் பலருக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஓய்வூதியச் சட்டத்தை நீக்க அமைச்சரவை ஒப்புதல்

பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை (நீக்குதல்) நீக்குவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிப்பதற்கு...

நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் நியமனம்

நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் பதவியில் தற்போது கடமையாற்றிய ஐ.பி.ஏ.குணசேகர 2025.12.04 ஆம்...

கடலில் மிதந்து வந்த 200 கிலோ போதைப்பொருள் தொகை மீட்பு

பேருவளை கடலில் சந்தேகத்துக்கிடமான முறையில் மிதந்து வந்த இரண்டு பொதிகளை மேல்...

GMOA தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுப்பு

தமது பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு கிடைக்காததால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும்...